திருச்சிராப்பள்ளி மாவட்ட மைய நூலக வாசகர் வட்டம் மற்றும் வாசக சாலை இணைந்து மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை இலக்கியச் சந்திப்பு “வாசக சாலை” நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதன்தொடர்ச்சியாக 08.09.2019 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் எழுத்தாளர் அரசனின் இண்டமுள்ளு சிறுகதை தொகுப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆய்வியல் நிறைஞர் அ.கீதா மற்றும் தனியரசு தமிழாசிரியர் சிறப்புரையாற்றினர். இந்நிகழ்ச்சிக்கு வாசகர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.




