கோடைகால சிறப்பு போட்டி – பரிசுகளும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கும் விழா

திருச்சிராப்பள்ளி மாவட்ட மைய நூலகம் வாசகர் வட்டத்துடன் இணைந்து மே 2019-ம் மாதம் நடத்திய குழந்தைகளுக்கான கோடைகால சிறப்பு நிகழ்ச்சிகளில் பங்குபெற்று போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கும் விழா மாவட்ட மைய நூலகத்தில் 16.06.2019 ஞாயிற்றுக்கிழமையன்று முற்பகல் 11.00 மணிக்கு நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட நூலக அலுவலர் திரு.அ.பொ.சிவகுமார் வாசகர் வட்டத்தலைவர் கவிஞர்.வீ.கோவிந்தசாமி மகளிர் வாசகர் வட்டத்தலைவி திருமதி.அல்லிராணி பாலாஜி வாசகர் வட்ட நிர்வாகிகள் திரு.இலகணேசன்இ திரு.நன்மாறன் முதல் நிலை நூலகர் திருமதி.கண்ணம்மாள் நூலகர் திரு.தர்மர் கலந்து கொண்டனர்.