மாவட்ட மைய நூலகத்தில் மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சிகள்

திருச்சிராப்பள்ளி மாவட்ட மைய நூலக மகளிர் வாசகர் வட்டம் பெண்கள் யுகா அமைப்பும், திருச்சிராப்பள்ளி ரோட்டரி பீனிக்ஸ் இணைந்து மகளிர் தினத்தன்று மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டிற்கான ‘தையல் பயிற்சி’ மாவட்ட மைய நூலகத்தில் காலை 10.00 மணி முதல் 1.00 மணி முடிய நடத்தப்பட்டது. இப்பயிற்சியில் ஒரே நாளில் ரவிக்கை வெட்டித்தைக்கும் பயிற்சியினை திருமதி.ராதிகா மகளிர்க்கு பயிற்சி அளித்தார்
பிற்பகல் 2.30 மணிக்கு மகளிர்க்கான “பேச்சுப்போட்டியும், நினைவாற்றல் போட்டியும்” நடைபெற்றது. மகளிர் நலன் முன்னேற்றம் தொடர்பான 28 தலைப்புகள் தயார் செய்யப்பட்டு மகளிர்க்கு பேச்சுப்போட்டி நடத்தப்பட்டது. நினைவாற்றல் போட்டியில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களை சில நிமிடங்கள் காட்சிப்படுத்தி அக்காட்சிப்படுத்திய பொருட்களை மகளிர் நினைவாற்றலுடன் எழுதும்; நினைவாற்றல் போட்டி நடத்தப்பட்டது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து “மகளிர் மட்டும்” என்ற தலைப்பில் பொது அறிவு “வினாடி வினா” போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டியினை வினாடி வினா வேந்தர் பேராசிரியர். ஜி.பாலகிருஷ்ணன்; நடத்தினார். பயிற்சி மற்றும் போட்டிகளில்; கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.