திருச்சிராப்பள்ளி மாவட்ட மைய நூலகத்தில் IAS, IPS போன்ற குடிமைப்பணித் தேர்வுகளுக்கும் மத்திய – மாநில அரசுப் பணிகளுக்;கான போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவ மாணவியர்களுக்கு உரிய ஆலோசனைகள் வழங்கும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி 16.06.2019 பிற்பகல் 3.00 மணிக்கு மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணைய மேனாள் தலைவர் ந.க.ரகுபதி IAS (ஓய்வு) ஆலோசனை வழங்கி மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட நூலக அலுவலர் திரு.அ.பொ.சிவகுமார் வாசகர் வட்டத்தலைவர் கவிஞர்.வீ.கோவிந்தசாமி வாசகர்; வட்ட நிர்வாகி திரு.நன்மாறன் மற்றும் முதல் நிலை நூலகர் திருமதி.கண்ணம்மாள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.