மாவட்ட மைய நூலகத்தில் அகில இந்திய வானொலி நேரடி விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருச்சிராப்பள்ளி மாவட்ட மைய நூலகம் மற்றும் திருச்சிராப்பள்ளி ஹலோ எப் எம் சார்பாக 12.03.2020 அன்று அகில இந்திய வானொலி ஹலோ எப் எம் நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்;சி மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் போட்டித்தேர்விற்கு தயார் செய்து வரும் மாணவ மாணவியர்கள், வாசகர் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அவர்களிடையே உடல்நலம், ஆரோக்கியம், உடல் நலக்குறைபாடுகள் கேட்டறிந்தும் குழந்தையின்மை பிரச்சனை, நீர்கட்டி, ஒற்றை தலைவலி, தைராய்டு தலையில் ஏற்படும் பொடுகு இவற்றை சரிசெய்ய கூடிய சித்த மருத்துவம் பற்றியும், சித்தா ஆயூர்வேதம் , ஹோமியோபதி யுனானி இம்மருத்துவத்தின் மூலம் “உணவே மருந்து’ என்பது பற்றியும், நோய்கள் குணமாவதற்கான சித்த மருத்துவ வழிமுறைகள் பற்றியும் அரசு பொது மருத்துவமனை சித்த மருத்துவர் டாக்டர் எஸ்.காமராஜ் விளக்கி கூறினார். அகில இந்திய வானொலி இயக்குநர் நடராஜன் அவரது உரையில் போட்டித்தேர்வு மாணவர்கள் தேர்வினை எதிர்கொள்ள வானொலியில் காலை மாலை இரண்டு வேளைகளிலும் தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளில் நாட்டு நடப்புகள் உலக செய்திகளை கேட்கும் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.