தேசிய வருவாய் வழி திறனறிவுத் தேர்விற்கான பயிற்சி வகுப்பு

திருச்சிராப்பள்ளி மாவட்ட மைய நூலகத்தில் அரசு அரசு உதவி பெறும் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு கல்வி பயிலும் மாணவ மாணவியர்களுக்காக மத்திய அரசு வழங்கும் “தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை” திட்டத்தின் கீழ் திறனறிவுத் தேர்விற்கான பயிற்சி வகுப்புகள் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10.00 மணி முதல் 1.00 மணி முடிய எட்டாம் வகுப்பு அறிவியல், சமூக அறிவியல், கணிதம் தொடர்பான பாடத்திட்டங்களுக்கான வகுப்புகள், மனத்திறன் தேர்வு மற்றும் படிப்புத்திறன் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இன்று 05.10.2019 நடைபெற்ற பயிற்சி வகுப்பில் skype மூலம் மைய நூலகத்தில் நடைபெறும் பயிற்சி வகுப்பினை தொட்டியம் கிளை நூலகத்தில் நூலகத்தை சுற்றியுள்ள எட்டாம் வகுப்பு கல்வி பயிலும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் VIDEO CONFERENCING வழியாக பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.